500 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரும் பந்துல

451 0

அரச ஊடகம் ஒன்று மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் தனக்கு நஸ்டஈடு தர வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில், தான் வௌியிட்ட கருத்து தொடர்பில் தனக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்தி வௌிட்டமைக்காக அரசாங்கம் ஊடகம் ஒன்றிடம் இருந்து 200 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வௌியிட்டமை குறித்து ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக 300 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில், சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன, குறிப்பிட்டுள்ளார்.