மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
லொரி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் மற்றும் இருவரும் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒன்றறை வயதான அங்கம்பிடிய பகுதியைச் சேர்ந்த சிறு குழந்தை பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்துடன் தொடர்புடைய லொரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு. பாதுக்க பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

