இந்திய இராஜதந்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்

162 0
கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் வன்முறை தூண்டுதல்களை எதிர்த்துப் போராடுவதன் அவசியத்தையும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கனேடிய  வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜோலியுடனான  சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.

இந்தோனேசியா – ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியன் வெளிவிவகார அமைச்சர்களின் உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக இந்த இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கனடாவில், காலிஸ்தானி பிரிவினைவாதிகள் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய இந்திய எதிர்ப்பு சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ளன.

ஆதாரங்களின்படி, சுவரொட்டிகள் மூலம் இந்திய இராஜதந்திரிகளுக்கு அச்சுறுத்தல்கள்  விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கனடாவிற்கான இந்திய தூதருக்கும் டொராண்டோவில் உள்ள தூதரக ஜெனரலுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் இருந்தன.

சீக்கிய தீவிரவாதிகளால் பரப்பப்பட்டதாகக் கூறப்படும் சுவரொட்டிகளில் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தாணிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொராண்டோ இந்தியத் தூதரக ஜெனரல் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் காலிஸ்தான் போராளிகள் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு குற்றம் சாட்டினர்.

கனடா அரசு மென்மையாகவும், நாட்டில் காலிஸ்தான் ஆதரவு கூட்டங்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், பயங்கரவாதத்திற்கு எதிராக எப்பொழுதும் தீவிர நடவடிக்கை எடுப்போம். வன்முறை மற்றும் தீவிரவாதம் அனைத்து வடிவங்களிலும் பின்னுக்குத் தள்ளப்படுவதை தனது நாடு உறுதி செய்யும் என்றார்.