சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வசிக்கும் மூவரை துணியால் கட்டிவைத்து விட்டு பின்னர் தங்க நகைகள் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக அந்த வீட்டில் வசிக்கும் 75 வயதுடைய பெண் ஒருவர் சீதுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தை தடுக்க முற்பட்ட வேளையில் அந்த சந்தேக நபர் அங்கிருந்த மூவரையும் துணியால் கட்டி வைத்துவிட்டு தங்க நகைகள் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்காக சீதுவை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

