அபாய அளவை கடந்து யமுனையில் வெள்ளம்! ஆபத்தான நிலையில் டெல்லி இமாச்சல்

55 0

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக யமுனை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

யமுனை நதியில் கடந்த 1978-ஆம் ஆண்டு 207.49 மீட்டர் அளவிற்கு வெள்ள நீர் சென்றது. அதுதான் உச்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த அளவையும் தாண்டி யமுனை நதியில்  207.55 மீட்டர் அளவிற்கு யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. யமுனையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நதியில் இந்த அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக யமுனை நதியில் 205.6 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்தாலே  அபாயகர அளவாக உள்ள நிலையில் தற்போது 207.55 மீட்டர்-ஆக பதிவாகியுள்ளதாக மத்திய நீர் ஆணையம் அறிவித்துள்ளது. அதேவேளையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

அதோடு வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளதால் யமுனா நதிக்கரை ஓரம் மற்றும் அருகே வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளநீரை தடுக்க பல தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யமுனை நதியின் கரையோரப்பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கும் செல்லக்கூடாது என டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீட்பு பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அந்த மாநில முதலமைச்சர் சுக்வீந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார். தொலைபேசி இணைப்புஇ இணைய சேவை இணைப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மின்சார இணைப்பு சீர் செய்யப்பட்டு வருகிறது  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலா பயணிகளில் 50மூ பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

மேலும்இ மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக கசோல் என்னும் பகுதியில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் சுமார் ரூ.4000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.