பொது மக்கள் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்து செயற்படும் நிலை காணப்படும் தற்போதைய பின்னணியில் அமைச்சரவை உறுப்பினர்கள்,அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தியுள்ளது கவலைக்குரியதாகும்.
மரத்தை வெட்டி வீழ்த்துவதற்கும் அல்லது வெட்டி வீழ்த்துவதற்கு கட்டளை பிறப்பிப்பதற்கும் அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சரவைக்கு சட்ட அந்தஸ்த்து,அதிகாரம் இல்லை என சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘பன்டு கரந்த அல்லது க்ரூடியா சிலனிக்கா’என்ற அருகிவரும் மரம் வெட்டி வீழ்த்தப்பட்டமை தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவை அனுமதியுடன் கம்பஹா தரால்வாவில் பகுதியில் இருந்த ‘பன்டு கரந்த அல்லது க்ரூடியா சிலனிக்கா’என்ற அருகிவரும் மரம் அவ்விடத்தில் இருந்து வெட்டி அகற்றப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும்,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சருமான பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 42ஆவது அத்தியாயத்தின் விசேட விதிவிதானங்களுக்கு அமைய ஒரு மரத்தை வெட்டி வீழ்த்துவதற்கும் அல்லது வெட்டி வீழ்த்துவதற்கு கட்டளை பிறப்பிப்பதற்கும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும்,அமைச்சரவைக்கும் சட்ட அந்தஸ்து,அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஆகவே அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் இந்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளமை சட்டத்துக்கு முரணானதொகு செயற்பாடாகும்.மரத்து வெட்டி வீழ்த்துவதற்கான யோசனை முன்வைத்த அமைச்சர் பந்துல குணவர்தன ,அந்த யோசனைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சரவை உறுப்பினர்கள் இரண்டு வருடம் முதல் ஐந்து வருடகால சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையான தண்டப்பணத்துக்குரிய குற்றமாகும்.
பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து செயற்படும் நிலை காணப்படும் பின்னணியில் அமைச்சரவை உறுப்பினர்கள்,அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டத்தை முறைகேடாக வகையில் பயன்படுத்துவது கவலைக்குரியதாகும்.நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை அமைச்சரவை மீறுகிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

