பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் இரண்டு சிறுமிகளுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

138 0
image
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்  தனது உடலில் பெற்றோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் வெல்லம்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் இந்த நபரை கைதுசெய்துள்ளனர்.

பாடசாலைசீருடையில் காணப்பட்ட பத்து மற்றும் ஏழு வயது  சிறுமிகளுடன் இந்த நபர் பெற்றோலை தனது உடலில் ஊற்ற முயல்கின்றார் என்ற தகவல் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அந்த நபரை கைதுசெய்துள்ளனர்.

தற்கொலை முயற்சியை தடுத்த பொலிஸார் அந்த நபரை இரண்டு சிறுமிகளுடன் கைதுசெய்துள்ளனர்.

கைக்குண்டு போதைப்பொருட்கள் வைத்திருந்தமை உட்பட குறிப்பிட்ட நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் உள்ளதாகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.