துருக்கிய அரசாங்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தி

252 0

ஐரோப்பிய நாடுகளில் துருக்கிய அரசாங்கம் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளது.

துருக்கியில் நடைபெறவுள்ள கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுவாக்கும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள துருக்கியர்களின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், ஜேர்மனி, ஒஸ்ரியா மற்றும் நெதலாந்து ஆகிய நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், துருக்கி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே ராஜதந்திர முரண்பாடுகள் தொடர்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நெதர்லாந்தின் முக்கிய துறைமுக நகரான ரொட்டடாம் நகரில், துருக்கிய அமைச்சர்கள் இருவர் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த துருக்கி, நெதர்லாந்திற்கு எதிராக பொருளாதார தடைகளை சர்வதேச அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.