பாகிஸ்தானின் பஞ்சாப், பலோசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் லாகூர் உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 2 தினங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

