பிரான்ஸ் தலைநகரில் மேயரின் வீட்டின் மீது தாக்குதல் – தீக்கிரை – தப்பியோடிய குடும்பத்தினர் மீதும் தாக்குதல்

65 0
image
பிரான்சில் கலவரங்களில்  ஈடுபட்டுள்ளவர்கள் பாரிசின் மேயரின் வீட்டின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதலை மேற்கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள மேயரின் வீட்டை தீக்கிரையாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடிய மேயர் குடும்பத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் கொலை முயற்சி என கருதப்படுகின்றது பிரதமர் எலிசபெத் போர்னே இது சகித்துக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

தாக்குதல் இடம்பெற்றவேளை மேயர் வின்சென்ட்ஜீன்பிரம் வீட்டில் இருக்கவில்லை எனினும் அவரது மனைவியின் கால்முறிந்துள்ளதாகவும் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை பதின்மவயது இளைஞனை பொலிஸார் கொலை செய்த பின்னர் பிரான்சில் வன்முறைகள் இடம்பெறுகின்றன.

நான் எனது அலுவலகத்திலிருந்து நகரின் நிலைமையை அவதானித்துக்கொண்டிருந்தவேளை எனது வீடு தாக்கப்பட்டது என மேயர் தெரிவித்துள்ளார்.

கார் ஒன்றை பயன்படுத்தி வீட்டின் கேட்டினை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தவர்கள் அந்த காரிற்கு பின்னர் தீமூட்டினார்கள் அந்த தீவீட்டை நோக்கி பரவச்செய்வதே அவர்களின் நோக்கம் என மேயர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவி ஏழு மற்றும் ஐந்துவயது பிள்ளைகளுடன் தப்பியோடமுயன்றவேளை பட்டாசுகள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது கொலைமுயற்சி வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத கோழைத்தனம் என மேயர் தெரிவித்துள்ளார்.