தாய் மொழியை ஊட்டி வளர்த்த பேர்லின் தமிழாலய ஆசிரியத் தெய்வங்களுக்கு பேர்லின் நகரத்தால் மதிப்பளிப்பு

453 0

புலம்பெயர் மண்ணில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தாய்மொழியை பல்லாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வரும் யேர்மன் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலய ஆசிரியத்தெய்வங்களுக்கு பேர்லின் மாநகர பிதா சார்பாக பொதுச்சேவை மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

இவ் மதிப்பளிப்பு கடந்த வியாழக்கிழமை Neukölln மாவட்ட அலுவலகத்தில் , மாவட்ட நகரபிதாவின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பொதுத்சுடர் ஏற்றலுடன் , அகவணக்கதுடன் ஆரம்பிக்பட்ட நிகழ்வில் , மாவட்ட நகரபிதாவின் உரையுடன் பல்லாண்டு காலமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுச்சேவையி்ல் ஈடுபடும் மூத்த ஆசிரியர்களுக்கும் , தமிழாலயத்தை தோள்மீது சுமந்து வளர்க்க நிற்கும் இளம் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மதிப்பளிப்பு நடைபெற்றது. இவ் நிகழ்வில் தமிழாலயத்தின் முத்து விழாவின் சிறப்பு வெளியீடாக தமிழாலத்தின் சிறப்பு முத்திரையும் வெளியிடப்பட்டு ஆசிரியர்களுக்கு அன்பளிக்கப்பட்டது.

புலம்பெயர் மண்ணில் தமிழ் வளர்க்கும் ஒவ்வொரு ஆசிரியத் தெய்வங்களுக்கும் கிடைக்கப்பெற்ற மதிப்பளிப்பாகவே இந்த நிகழ்வை நாம் கருத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.