பிரான்சில் 17 வயது நஹெலின் கொலை ; கட்டமைக்கப்பட்ட இனவெறியின் வெளிப்பாடு

179 0
image

இந்த வாரம் பிரான்ஸ் பொலிஸார் பட்டப்பகலில் வீதிப்போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் 17 வயது இளைஞனை சுட்டுக்கொன்றனர். அந்த இளைஞன் போக்குவரத்து பொலிஸ் உத்தியோக்த்தர் ஒருவரின் மீது தனது வாகனத்தால் மோத முயன்றார் என குற்றம்சாட்டினார்.

 

 

 

 

 

 

 

வழமைபோல பிரான்ஸ் ஊடகங்கள் பொலிஸாரின் கட்டுக்கதைகளை வெளியிட்டன.

இந்த சம்பவத்தை அருகிலிருந்து தனது செல்போனில் படமெடுத்த ஒருவரின் வீடியோ வெளியாகிய பின்னரே எது உண்மை என்பது தெரியவந்தது.

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பாரிசின் புறநகர் பகுதியான நன்டேரேயில் மஞ்சள் நிற வாகனத்தில் உள்ள ஒருவரை நோக்கி பொலிஸார் தமது துப்பாக்கிகளை நீட்டுவதையும்  அந்த பதின்ம வயது இளைஞனை சுட்டுக்கொல்வதையும் உலகம் முழுவதும் பார்த்துவிட்டது.

பொலிஸார் தெரிவிப்பது போல எந்த பொலிஸ் உத்தியோகத்தரும் காரின் முன்னாள் நிற்கவில்லை, காரை செலுத்திய இளைஞர் எவரையும் மோதவும் முயலவில்லை.

பிரான்சின் சமூகவியலாளர் எமிலிடேர்க்கம் தெரிவித்தது போல இந்த வீடியோ பிரான்சின் கூட்டு மனச்சாட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் பிரான்ஸ் முழுவதும் இடம்பெறுகின்றது. அதனை தடுப்பதற்கு அரசாங்கம் பொலிஸாரை பயன்படுத்துகின்றது. அவர்கள் கண்ணீர் புகைபிரயோகத்தில் ஈடுபடுகின்றனர். சட்டமொழுங்கை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கின்றனர்.

காலனித்துவ இனவெறி மற்றும் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் என பிரிக்கப்பட்ட மக்களிற்கு எதிரான வன்முறையின் நீண்ட மற்றும் மோசமான வரலாற்றை பிரான்ஸ் கொண்டுள்ளது.

வெள்ளையர்கள் அல்லாதவர்கள் என கருதப்பபடுபவர்களில் ஹெய்ட்டி மக்கள் மேற்கிந்தியர்கள் ரீயூனியனை சேர்ந்தவர்கள் வியட்நாமை சேர்ந்தவர்கள் மேற்கு ஆபிரிக்க மக்கள் உள்ள பல நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

பிரான்ஸ் அல்ஜீரிய மக்களை மிகமோசமாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கியுள்ளதுபிரான்ஸ் பிரஜைகளான அல்ஜீரியர்களுக்கும் இதே நிலைதான்.

 

 

 

 

 

பிரான்ஸ் 1800களில் அல்ஜீரியாவை தனது காலனி நாடாக்கியதுதனது ஆட்சியை நிலைநாட்டுவதற்காக ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறைகள் கொலைகளில் ஈடுபட்டது.

அல்ஜீரியாவின் சுதந்திரபோராட்டத்தின்போது (1954 – 62) சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற கோசங்களின் கீழ் தனது காலனித்துவ ஆட்சியை தக்கவைப்பதற்காக பிரான்ஸ் ஒரு மில்லியனிற்கும் அதிகமான அல்ஜீரிய மக்களை கொலை செய்தது.

பிரான்சில் அரசியல் வன்முறைகள் அராபியர்களையும் கறுப்பினத்தவர்களையும் இலக்குவைத்துள்ளன.1961ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட அராபியர்கள் பிரான்ஸ் பொலிஸாரால்; சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அல்ஜீரியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும்  ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்திற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் – இதற்கு பதில் நடவடிக்கையாக பிரான்ஸ் பொலிஸார் அராபிய ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியிலேயே  சுட்டுக்கொன்றனர்.

செய்ன் ஆற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூழ்கடிக்கப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது 15 வயது பாத்திமா பெடா என்பவரும் கொல்லப்பட்டார்.

ஸ்மார்ட்போனிற்கு முந்தைய அந்த காலத்தில் பிரான்ஸ் அதிகாரிகள் இந்த படுகொலைகளை நன்கு திட்டமிட்டு மூடிமறைத்தனர் மறைத்துவருகின்றனர்.

என்ன நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு பிரான்ஸ் ஜனாதிபதியொருவருக்கு 50 வருடங்கள்பிடித்தது.

இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரப்படவில்லை.

நாந்தேரில் கடந்தவாரம் நஹெல் கொல்லப்பட்டமைக்கு வழிவகுத்த காலனித்துஇனவெறி பொலிஸ் அராஜக  வரலாற்றுசூழல் ஆகியவை குறித்த அக்கறை வெள்ளையின அரசியல்வாதிகள் மற்றும் ஊடக ஜாம்பவான்களிடம் இல்லை.

பொலிஸாரினால் படுகொலை செய்யப்படுவது பிரான்சில் அதிகரித்து வருகின்ற போதிலும் கொல்லப்படுபவர்கள் கறுப்பினத்தவர்கள் அல்லது அராபியர்களாக இருக்கின்ற போதிலும் பிரான்சில் கட்டமைக்கப்பட்ட இனவெறி காணப்படுவது குறித்த உண்மையை பிரான்ஸ் அதிகாரிகள் தீவிரமாக மறுத்துவருகின்றனர்.

2023 இல் பிரான்சில் பிரான்ஸ் வட ஆபிரிக்க இளைஞனிற்கு விதிக்கப்பட்ட இந்த மரணதண்டனையை (படுகொலையை) இது புறநகர்பகுதிகளில் குடியேற்றம் மற்றும் வறுமையின் தவிர்க்க முடியாத பிரச்சினைகள் என்ற கோணத்தில் பார்க்கின்றனர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அல்லது ஒருமோசமான ஒழுங்காக பயிற்றுவிக்கப்படாத காவல்துறை அதிகாரியின் செயலாக இந்த கொலையை பார்க்கின்றனர்.

பிரான்சில் தொடரும் பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இந்த கொலை விளக்க முடியாதது என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவும் பிரான்சின் புனைகதை மற்றும் தொடர்ச்சியான மறுப்பின் ஒருவடிவம்

நஹெலின் மரணம் ஒரு தீர்வு காணமுடியாத மர்மம் இல்லைஇது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இனவெறியின் வெளிப்பாடாகும்.

 

aljazeera.

Crystal M. Fleming

தமிழில் ரஜீபன்