பிறவியில் நான்கு கால்களும் ஊனத்துடன் பிறந்து உயிர்வாழும் பசுக்கன்று

342 0

பிறவியில் நான்கு கால்களும் ஊனத்துடன்பிறந்து உயிர்வாழும் பசுக்கன்று இதுவாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 35ம் கொலணி கிராமத்தில் பசு ஒன்று தனது முதலாது கன்றை ஈன்றுள்ளது.

98ம் இலக்க வீட்டில் வசிக்கும் நடராசா கைலாயப்பிள்ளை என்பவரின் வளர்ப்பு பசுவே தனது முதலாவது கன்றை நான்கு கால்களும் செயலிழந்த நிலையில் ஈன்றுள்ளது.

அறுபது நாட்களான சுக்கன்று இன்று வரையும் உயிருடன் உயிர்வாழ்வது இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஆகும்.

ஊனத்தை தவிர வேறு நோய்கள் இப்பசுக்கன்றுக்கில்லை என்று பசுவினை வளர்ப்பவர் தெரிவிக்கின்றார்.

தனதுதாய்ப்பசு வந்து தனது கன்றுக்கு பால்கொடுப்பது கஸ்டப்படுவதாகும் தெரிவித்தார்.

பாலைக்கொடுக்கும் பசுவுக்குபசுவினை வளர்ப்பவர் முன்னங்காலினை சிறப்பான முறையில் தூக்கிப்பிடித்துக் கொடுக்கும் போதுதான் பசுக்கன்று பாலினை தாயின் பால்முலைக்காம்பில் பாலைக்குடிக்கின்றது.

மேலும் காலம் செல்லச்செல்ல தூக்கிபாலைக்கொடுப்பது கஸ்டமான காரியமாகும் எனத் தெரிவித்தார்