வடக்கு மாகாணத்தில் 1029 ஆசிரியர்களுக்கான ஆசிரிய நியமனங்கள் இன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வில் பட்டதாரிகளான 549 பேருக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற 480 பேருக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நியமனங்கள் புவியியல், வராலாறு, உளவளத்துணை, ஊடகம், மற்றும் குடியியல் ஆகிய துறைகளுக்கான வழங்கி வைக்கப்பட்டன.
நியமனம் வழங்கும் நகிழ்வில் வடக்கு மாகாண சபையின் அவவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வடக்கு மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

