அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நஸ்டஈட்டினை உரிய முறையில் வழங்காத அதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்றத்தை வழங்க உத்தரவிட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் – இபலோகம – புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில அதிகாரிகள் இழைக்கும் தவறால், மற்றைய அதிகாரிகள் மற்றும் அரசாங்கமும் சிரமங்களுக்கு உள்ளாவதாக துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

