31 வருடங்களின் பின் இலங்கை வரும் தென்கொரிய வௌிவிவகார அமைச்சர்

234 0

தென் கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் யுன் பியூங்-சே இலங்கைக்கு இம் மாதம் விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 15ம் திகதி அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த விஜயம் அமையவுள்ளது.

மேலும், இதன்போது இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை யுன் பியூங்-சே சந்திக்கவுள்ளார்.

இறுதியாக 1986ம் ஆண்டு தென் கொரிய வௌிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 31 வருடங்கள் கழித்து, அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஒருவர் நாட்டுக்கு வரவுள்ளமை விஷேட அம்சமாகும்.