அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் பண்டாரவளையில் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
பண்டாரவளை, பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விபத்துக்குள்ளான சாராதி தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே இவ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் இருந்து இரண்டு நோயாளர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்புலன்ஸ் சாரதியின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

