உக்ரைனின் ரமடோர்ஸ்க் உள்ள பீட்சா உணவகத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இரட்டையர்களான சகோதரிகள் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
யூலியா அனாஅக்சென்சென்கோ என்ற 14வயது சகோதரிகளே ரஸ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஸ்ய ஏவுகணைகள் இரண்டு தேவதைகளின் இதயதுடிப்பை நிறுத்தின என ரமடோர்ஸ்க் நகரப்பேரவை தெரிவித்துள்ளது.
17 வயது யுவதியொருவரும் உயிரிழந்துள்ளார், எட்டுமாத குழந்தை காயமடைந்துள்ளது.

