பதவி விலக வேண்டிய அவசியமில்லை: கெஹெலிய ரம்புக்வெல

132 0

தான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதி கிடைக்காவிட்டால் தான் பதவியை இராஜினாமா செய்வேன் என சமீபத்தில் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் தான் பதவி விலகப்போவதில்லை என தற்போது தெரிவித்துள்ளார்.

திறைசேரி அதிகாரிகளை சந்தித்தபோது மருந்துகளை, மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதி வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளன என குறிப்பிட்ட கெஹெலிய ரம்புக்வெல நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றே தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

100 மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுகின்றது.

உரிய நிதி கிடைத்ததும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.