புருனோ திவாகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்!

140 0
நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புருனோ திவாகர இன்று (28) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தொடர் விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த புருனோ திவாகர, “நம்ம வாயை அடைக்க யாருக்காவது ரொம்ப ஆசை… அவர்களின் முயற்சி இதுவாக இருந்தால் நாமும் இந்தத் தடைகளை மீறி எங்கள் வேலையைச் செய்ய முயற்சிப்போம்”  என்றார்.