தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனியால் நடாத்தப்பட்ட மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 24.6.2023

898 0

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனியால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இந்த வருடம் வில்லிச் நகரில் 24.06.2023 சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் 15 கழகங்களும் 22 தமிழாலயங்களும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாகப் பொதுச்சுடரினை முன்சன்கிளட்பாக் நகரின் கோட்டப் பொறுப்பாளர் திரு வீரசிங்கம் சத்திவடிவேல் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து யேர்மன் தேசியக் கொடியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வன் மிதுனன் இரட்ணராஜா அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு தர்மலிங்கம் இராஜகுமாரன் அவர்களும் தமிழ்க் கல்விக்கழகத்தின் கொடியைத் தமிழாலயம் முன்சன்கிளட்பாகின் நிர்வாகி திரு ஹரிகர சர்மா கிமேஷ் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

அணிவீரர்கள், நடுவர்கள் ஆயத்தமாகித் திடலுக்கு வந்ததும் போட்டிகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின.
பார்வையாளர்களின் உற்சாக ஊக்கப்படுத்தலுடன் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் தங்களுடைய தனித்தன்மையை வெளிக்கொண்டு வரும் விதமாக மிகச் சிறப்பாக விளையாடின.

சுற்றுப்போட்டியின் முடிவில் 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் நிலையை தமிழாலயம் மேர்புஸும் இரண்டாம் நிலையை தமிழாலயம் முன்சன்கிளட்பாகும் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக(Man of the Match) Kajith Nadeskumar அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) Arjun Kanthiran அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியின் முடிவில் 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் நிலையை தமிழாலயம் யூச்சனும் இரண்டாம் நிலையை தமிழாலயம் லெவர்குசனும் மூன்றாம் நிலையை தமிழாலயம் வுப்பர்டலும் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக(Man of the Match) Ajaj அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) Jagelan Jegesethwaran அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியின் முடிவில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் நிலையை தமிழாலயம் வுப்பர்டலும் இரண்டாம் நிலையை தமிழாலயம் யூச்சனும் மூன்றாம் நிலையை தமிழாலயம் லெவர்குசனும் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக(Man of the Match) அவனேஸ் அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) ஒலிவ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியின் முடிவில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் நிலையை தமிழாலயம் யூச்சனும் இரண்டாம் நிலையை தமிழாலயம் பீலபெல்டும் மூன்றாம் நிலையை தமிழாலயம் மேர்புஸும் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக (Man of the Match) Jenath, Dijon அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) Roshan அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியின் முடிவில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் நிலையை தமிழாலயம் யூச்சனும் இரண்டாம் நிலையை தமிழாலயம் ஹெர்னவும் மூன்றாம் நிலையை தமிழாலயம் எசனும் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக(Man of the Match) Kishoban அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) Calvin அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியின் முடிவில் 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் நிலையை SC Hamm இரண்டாம் நிலையை TSC Dortmund மூன்றாம் நிலையை Hamm Wezt பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக(Man of the Match) Sulaxan அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளராக (Bester Torwart) Aruthra அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுற்றுப்போட்டியின் முடிவில் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் முதலாம் நிலையை தமிழாலயம் மேர்புஸும் இரண்டாம் நிலையை தமிழாலயம் முன்சன்கிளட்பாகும் மூன்றாம் நிலையை தமிழாலயம் வுப்பர்டலும் பெற்று வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இந்த பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனி (Woman of the Match) Serlin அவர்களும் சிறந்த பந்துக் காப்பாளிகள் (Beste Torhüterinnen) Sweshu, Abisha அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதியாகத் தமிழீழத் தேசியக் கொடி இறக்கி வைத்ததோடு போட்டிகள் இனிதே நிறைவுபெற்றன.