புதிய அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்

228 0

புதிய அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் நான்காவது அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

இதன் மூலம் இலங்கையின் அரசியல் அமைப்பு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமையவில்லை என்பது உணர்த்தப்படுகின்றது.

இந்திய அரசியல் அமைப்பு சுமார் 60 வருடங்கள் பழமையானது.

அமெரிக்காவின் அரசியல் அமைப்பு இருநூறு வருடங்கள் பழமையானது.

இந்த அரசியல் அமைப்புக்கள் சமூக பொதுத் தன்மை கொண்டவையாக அமைந்துள்ளன.

அத்தகைய அரசில் அமைப்பை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.

எனவே இலங்கையில் புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்பு சட்ட ரீதியானதாக மட்டுமல்லாது அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.

அத்தகைய ஒரு அரசியல் அமைப்பே இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடியதாக அமையும் என லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.