மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே முடிவெடுக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளனர்.
எனினும் அந்த விடயங்கள் அவ்வாறே இடம்பெற்றதில்லை.
இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழு தொடர்பான விடயமும் அவ்வாறானதே.
இலங்கையின் நீதிக்கட்டமைப்பு தொடர்பில் நம்பிக்கையுள்ளது.
மனித உரிமைகள் குறித்து பல்வே யோசனைகள் முன்வைக்கப்படலாம்.
எனினும் அது குறித்து இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற தீர்மானங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

