அரசியல் அமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம், புதிய அரசியல் அமைப்பிலும் கிடைக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.
எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
காலா காலமாக பௌத்தமதத்தையும் பாரம்பரியங்களையும் பௌத்த பிக்குமார் பாதுகாத்துவந்துள்ளனர்.
தற்போது புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது.
இதில் பௌத்த மதத்திற்கான இடம் அவ்வாறே பேணப்பட வேண்டும்.
இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய காலம் தோன்றியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

