நாகை மீனவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்

254 0

இந்திய மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவததையும் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதனால் 1800 விசைப்படகுகளும், 8 ஆயிரம் கண்ணாடியிழை படகுகளும் கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென தெரிவி;க்கப்படுகின்றது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்ததாக கூறப்படும் தமிழக மீனவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய மீகனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை என கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் நேற்று இடம்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய யாத்திரிகர்கள் ஒருவரும் இந்த முறை கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.