சமுர்த்தி திட்டத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

154 0

சமுர்த்தி திட்டத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு பிரதேச செயலகம் முன்பாக பெண்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து தாங்கள் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாங்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் நீர்கொழும்பு பிரதேச செயலகம் முன்பாக திங்கட்கிழமை (26) முற்பகல் பெண்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்திலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதுதொடர்பாக பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத் ஒருவருக்கும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.