குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல போலி கடவுச் சீட்டுகள் தயாரிப்பு

178 0

பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய  குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாகத்  தயாரித்ததாக கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து  போதைப்பொருளும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடவத்தை  பிரதேசத்தில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்   ஹோமாகம பிரதேசத்தில் போலி விமான  பயணச்சீட்டை தயாரித்தார் எனக் கூறப்படும்  மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.