அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்ற முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் வாரம் அரசாங்கம் எடுக்கவுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கு முன்னர் இலங்கை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என திறைசேரியின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையின் பாரதூரதன்மை காரணமாக நிதியமைச்சு உள்நாட்டுமறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன்மறுசீரமைப்புநடவடிக்கைகக்கு அங்கீகாரத்தை பெறுவதற்காக வாரஇறுதியில் நாடாளுமன்றத்தினைகூட்டுவது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிதலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்நாட்டு வங்கிகள் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்காது நாட்டின் நிதிநிலைமைக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தாது என திறைசேரி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது முழுமையாக சுயவிருப்பத்தின் பேரில் இடம்பெறும் நடவடிக்கை நாங்கள் அழுத்தங்களை கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 30 ம் திகதி விசேட வங்கி விடுமுறையை அறிவித்துள்ளதை தொடர்ந்து 28 ம் திகதி உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவுள்ளதா என்ற சந்தேகம் வர்த்தக சமூகத்தினரிடையே எழுந்துள்ளது.
விசேட வங்கி விடுமுறை காரணமாக நாட்டின் நிதிசந்தைகள் ஐந்து நாட்களிற்கு தொடர்ச்சியாக மூடப்படும் .
ஜூன் 29 ம் திகதி மூன்றாம் திகதி முதல் வங்கிகள் மூடப்படவுள்ளதால் அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளது என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு என்பது எதிர்மறையான விடயமாக கருதப்படுகின்றது இதன் காரணமாக அரசாங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் ஆய்வாளர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடவுள்ளனர்.
எனினும் இந்த ஊகங்களை மறுத்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செகான்சேமசிங்க நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் உள்நாட்டு பொறிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

