இளவாலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

148 0

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், அந்தப் பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.