ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை கப்பல் நாட்டிற்கு வருகை

227 0

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி, நேற்று உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இகாசுச்சி டிடி-107 கப்பல் 207 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

கப்பலின் கப்டன், மேற்கு கடற்படை தலைமையகத்தில் நேற்று, மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி டிடி-107 கப்பல் இன்று நாட்டில் இருந்து புறப்படுகிறது.