திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளி விவேகாநந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொன்றும் 1680 ரூபாய் பெறுமதியான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் வியாழக்கிழமை(22) வழங்கப்பட்டது.