டெங்கு நோயால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்துடன் மருத்துவமனை முன் உறவினர்கள் எதிர்ப்பில்

212 0
டெங்கு காய்ச்சல் காரணமாக களுபோவில மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மரணித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
மரணமடைந்த பெண்ணின் உறவினர்களால் இன்று இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சரியான சிகிச்சை வழங்காததன் காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மருத்துவனை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
22 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண், காய்ச்சல் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், டெங்கு நோயால் அவர் பீடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் களுபோவில மருத்துவமனை பணிப்பாளர் அசேல குணரத்னவிடம் வினவியது,
குறித்த பெண்ணின் கணவர், மருத்துவமனையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, விசாரணைகளை மேற்கொள்வதற்காக அனைத்து தகவல்களையும் சுகாதார அமைச்சிடம் நாளைய தினம் கையளிக்க உள்ளதாக களுபோவில மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.