குருந்தூர் மலை – 1956ம்ஆண்டை நோக்கி

133 0
image

ஏற்கனவே பனிவிழத்தொடங்கிவிட்டது- கார்ல் க்ராஸ் வசனங்கள் 111 இல்

 

 

ஹேர்குலீஸ் தனது ஐந்தாவது தொழிலாக அல்பியஸ் மற்றும் ஆறுகளை  வேறுபாதையில் செலுத்தியதன் மூலம் மன்னன் ஆஜியாசின் தெய்வீககால்நடைகளின் அசுத்தமான வாழ்விடம் வழியாக திசைதிருப்பிவிட்டதன்  மூலம்; அதனை சுத்தம் செய்தான்.

அரகலய இலங்கை சமூகத்தை சுத்தம் செய்யும் விடயத்தில் அவ்வாறான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என பலர் கருதினர்.ஆதிகாலதீவிரவாதத்தின் அழுக்குகளை இலட்சியவாதத்தால் அரகலய கழுவிச்செல்லும் என பலர் கருதினர்.

எனினும் குருந்தூர் மலை புயல்-இனமதத்தை அடிப்படையாக கொண்ட இனவாதம் இன்னமும் மரணிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நெருக்கடியின் உச்சகட்டமும் -ராஜபக்சாக்கள் மீதான எதிரான வெறுப்பும் ,இனவாதம் மறைந்திருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

கமஸிருந்து தெரிவிப்பதென்றால் மீண்டும் எலிகளை எழுப்புவதற்கான நேரம்வரும்வரை பிளேக்பேசிலஸ் மதஸ்தலங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் இருண்ட மூலைகளிலும் கற்பனையான வரலாறுகள் மற்றும் கூட்டு நினைவுகளில் செயலற்ற நிலையிலிருந்தது.

அதற்கான நேரம் தற்போதாகயிருக்கலாம்.

அரகலயகோட்டாபய ராஜபக்சவை தப்பியோடச்செய்து சரியாக ஒருவருடத்தின் பின்னர்  அவரது காவிசகாக்கள் மீண்டும் வந்துள்ளனர். ஒரு துண்டு அதிகாரத்திற்காகவும் ஒரு துண்டுநிலத்திற்காகவும் நாட்டில் மீண்டும் தீ மூட்ட வந்துள்ளனர்.

மேதகொட அபயதிஸ்ஸ தேரர் முதல்  சிங்கள ராவயவின் அக்கீமன தயாரட்ண தேரர் முதல் அனைவரும் வந்துள்ளனர்.

நடாசா எதிரிசூரிய ,புருணோ திவாகரவை வெற்றிகரமாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கியதன் மூலம் அரசியல் மதகுரு தனது மீள்வருகையை ஆரம்பித்தார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் அரசியல் தேவைகளிற்கு அடிபணியாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியிருந்தால் அரசியல் பிக்குகள் தங்களிற்கான சாதகமான தருணத்தை எதிர்பார்த்து பின்வாங்கியிருப்பார்கள்.

ஆனால் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் மரணித்தது போல செயற்பட்டது ஐசிசிபிஆரை நிந்தனை எதிர்ப்புச்சட்டமாக மாற்றுவதற்கு அனுமதித்ததுடன்  மாத்திரமல்லாமல் தெரிவு செய்யப்ட்ட விதத்தில் பாரபட்சமான விதத்தில் அதனை பயன்படுத்துவதற்கு அனுமதித்தது.இதன்காரணமாக நடாசாவும் புருணோவும் பௌத்தமதத்தை இழிவுசெய்தமைக்காக இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளனர்.அதேவேளை டிலீப் ஜெயவீர பலாங்கொட கசப்பதேரர் அக்கீமன தாயரட்ண தேரர் ஆகியோர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல்வர்க்கத்தின் கோழைத்தனமும் சந்தர்ப்பவாதமும் அரசியல் துறவிக்கு ( பௌத்தமதகுருக்கள் )அதிகாரத்தை அளித்துள்ளது.

எனவே குருந்தூருக்கான அணிவகுப்பு தொடங்கியது குருந்தூரில் அரசியல் துறவிகள் வெற்றிபெற்றால் அவர்கள் மீண்டும் தடுக்க முடியாதவர்களாக மாறிவிடுவார்கள்.

இது அவர்களின் நாடாக இருக்கும்

 

மிகிந்தலையின் வலவஹங்குன வாவே தம்மரதன தேரர் இதனையே கூறுகின்றார்.

இந்த நாடு பௌத்தமகாசங்கத்தின் சொத்து என அவர் தெரிவிக்கின்றார்,புராதன மன்னர்கள் இந்த நாட்டை பௌத்தமதகுருக்களிற்கு தானமாக வழங்கினார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஏனைய பௌத்தமதகுருமார் வடக்குகிழக்கு காணிவிவகாரங்களிற்கும் அரசநிறுவனங்களை  விற்பது அல்லது மறுசீரமைப்பதற்கும் இடையில் தொடர்பை  ஏற்படுத்த முயல்கின்றனர்.

அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் ரணில்விக்கிரமசிங்கவின்  பொருளாதார நிகழ்ச்சி நிரலிற்கு நேர்எதிரானதாக காணப்படுகின்றது.குருந்தூர் மலை விவகாரத்தை அவர்கள் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புபடுத்தியுள்ளனர். விக்கிரமசிங்கவின் மற்றுமொரு வாக்குறுதி.

அதிகாரப்பகிர்வு முதல் வானொலி நாடகங்கள் வரை சிறிய விடயங்கள் பெரிய விடயங்கள் அனைத்தையும் பௌத்தபிக்குகளே தீர்மானிக்கும் சிங்கள பௌத்த தேவராஜ்ய நிலமாக இலங்கையை மாற்றுவதே அவர்களின் திட்டமாகும்.

ஓலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை நியாயப்படுத்துவதற்காக ஜனாதிபதி தனது நூலகம் எரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.அந்த செயல் ஒரு காட்டுமிராண்டித்தனம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும்.

ஆனால் துரதிஸ்டவசமாக திரு விக்கிரமசிங்கவின் அனைத்து அரகலயக்கள் மீதான வெறுப்பும்  ஜனரஞ்சக இனவாத வலதுசாரிகளிடமிருந்து வெளிப்படும் ஆபத்துக்களை பார்க்க முடியாதவராக்கியுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடனான ஜனாதிபதியின் இரண்டாவது மோதலை காண்பிக்கும் கசியப்படவிடப்பட்ட வீடியோ குறித்து சிங்கள ராவயவின் செயலாளர் மதுபாசந்த பிரபாத்தின் கருத்துக்கள் இதற்கு சிறந்த உதாரணம்.

ரணில் ராஜீவ்காந்திக்கு என்ன நடந்தது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்,இந்த வீடியோ ஜனாதிபதிக்கு அருகில் உள்ள ஒருவரால் கசியவிடப்பட்டுள்ளது தன்னை சுற்றி சிங்கள பௌத்தர்கள் உள்ளதை ஜனாதிபதி புரிந்துகொள்ளவேண்டும்,இந்த வாக்குவாதம் உயர்பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றுள்ளது அங்கிருந்து இலகுவில் வீடியோக்கள் வெளியே வரமுடியாது தேசப்பற்றுள்ள பௌத்தர்கள் இந்த நாட்டிற்காக எதனையும் செய்வார்கள்  தேவையான தருணத்தில் தலையிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளை ஆயுதமயப்படுத்துதல்

பௌத்த ஆலோசனை குழுவிற்கு தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் 2020 ஜூன் மாதம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருட்கள் விவகாரத்தை கையாள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயலணியொன்றை நியமித்தார் – அந்த செயலணி ஒரேஇனத்தவர்களை கொண்டதாக காணப்பட்டது.

ஜனாதிபதியின் சகா ஓய்வுபெற்ற ஜெனரல் கமால்குணரட்ண தலைமையிலான அந்த குழுவில் தெரனவின் உரிமையாளர் திலித் ஜெயவீரவும் இரண்டு பௌத்தமதகுருமாரும் காணப்பட்டனர்,( இலங்கையில் உள்ள தமிழ்  தொல்பொருள் ஆய்வாளர்களில் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை)பின்னர் மேலும் நான்கு மதகுருமார்களும் தமிழர் ஒருவரும் முஸ்லீமும் சேர்க்கப்பட்டனர்.

முதன்முதலில் நியமிக்கப்பட்ட இரண்டு பௌத்தமதகுருமாரில் ஒருவர் சிங்களபௌத்த தொல்லியலில் முதிர்ந்த அனுபவம் மிக்கவரான ஜாதிஹஹெலஉறுமயவின்  எல்லாவல மேதானந்த தேரர்.அவர் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் பௌத்தத்திற்கு எதிரான சதி குறித்து கருத்துக்களை கொண்டிருப்பவர்.பௌத்த மதகுருமார் மத்தியில் எயிட்சினை பரப்புவது அவர்களின் திட்டம் என கருத்து தெரிவித்தவர்( சண்டேடைம்ஸ் 2007)

கோணேஸ்வரம் கோவிலாவதற்கு முன்னர் பௌத்த ஆலயமாக காணப்பட்டது என தெரிவிப்பவர் அவர். தொல்பொருள் திணைக்களம் இவ்வாறன பௌத்தமதகுருமாரின் கரங்களில் இருந்தால் கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலம் இடைநடுவில் முடிந்திராவிட்டால் நாங்கள் எங்கள் அயோத்தியை பார்த்திருப்போம்.

 

மற்றையவர் பனமுரே திலகவன்ச தேரர்

– 2019 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவர் தொல்பொருளியல் முகாமைத்துவம் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.-இந்த தருணத்தில் இந்த நாட்டின் சிங்களபௌத்தர்களாகிய நாங்கள்  அதிஸ்டசாலிகள் புத்திசாலிகள் துரதிஸ்டவசமான காலத்திற்கு முடிவு கட்டுவதற்கான புதிய தசாப்தம் ஆரம்பமாகியுள்ளது புதிய சூழலை புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான யுகமொன்று ஆரம்பமாகியுள்ளது,மகாசங்கத்தினர் என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு ஆதரவளிக்கின்றோம் . ( கோட்டாபய ராஜபக்ச) ஒரு சிங்கள பௌத்த தலைவர் நாளை பாதுகாப்பான சிங்கள பௌத்த தேசத்தை உருவாக்க முயல்கின்றார் என்பது குறித்து பௌத்தமகாசங்கத்தினரான நாங்கள் மகிழ்;ச்சியடைந்துள்ளோம்,என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1980களில் சிறில்மத்தியு புராதான ஆலயங்களை அடையாளம் கண்டு அவற்றை மீளஉருவாக்கினார்,வடக்குகிழக்கில் சிங்கள பௌத்த விவசாய சமூகங்களை உருவாக்கினார்,இந்த சிங்கள சமூகங்கள்வடக்குகிழக்கில் தொடர்ந்திருந்தால் அந்த பகுதிகள் நெருக்கடியின் பிடியிலிருந்து விடுபட்டிருக்கும் பயங்கரவாதிகளின் கரங்களில் சிக்குண்டிராது எனவும் அவர்தெரிவித்தார்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் ஜகத்வீரசிங்க 2022 ம் ஆண்டு சேனஹ பண்டாரநாயக்க நினைவுச்சொற்பொழிவில் தொல்பொருளியல் ஜனரஞ்சகத்திற்கு அடிபணிந்து மேலாதிக்கத்திற்கான ஒரு கைக்கூலியாக மாறுவது குறித்த தனது சந்தேகங்கள் கரிசனைகளை வெளியிட்டிருந்தார்.

பேராசிரியர் வீரசிங்கவின் அச்சங்கள் உண்மையானவையாக மாறுகின்றன

தொல்பொருள் மதகுருமார் அரசியல்வாதிகள் மற்றும் உள்நோக்கம் கொண்ட சக்திகளிக்கு அடிபணிந்த தொழில்சார்வல்லுனர்களால் ஆயுதமாக மாற்றப்படும்போது அது ஈவிரக்கமற்ற நீண்டகாலமோதல்களிற்கான விதைகளை தூவுகின்றது. ஹோர்ட்டன் பியெ;னால் அவ்வாறான மோதல்களின் போது தாக்குபிடிக்க முடியுமா என்பது அனைவரினதும் ஊகத்திற்குரிய விடயம்.

கோட்டாபயராஜபக்சவின் தொல்பொருள் செயலணி ஏற்படுத்தப்பட்டதும் அது வரலாற்றை மீண்டும் எழுதவும் உண்மைகளை உருவாக்கவும் தொல்பொருளியலை பயன்படுத்தியது.

ரஜீபன்