பண மோசடி : அரசியல்வாதியின் சகோதரர் கைது!

150 0

துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்  தருவதாக கூறி போலியான விசாக்களை தயாரித்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில்  ஒருவர்  சனிக்கிழமை (17)  கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின்   சகோதரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் வேலை பெற்றுத்  தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று  ஏமாற்றியதாக மூன்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.