கொலன்னாவ, ஸ்ரீ மஹா போதி விஹாரையின் வாசஸ்தலத்தில் விஹாராதிபதிக்குச் சொந்தமான ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடியதாக முறைப்பாடு செய்த ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மஹா போதி விஹாரையில் கடந்த 12ஆம் திகதி இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
இந்த திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்த ஊழியர் மீது சந்தேகமடைந்த பொலிஸார் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்தபோது தனக்கு போதிய சம்பளம் கிடைக்காததால் தான் இவ்வாறு திருடியதாக குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
பொலிஸாரை திசைதிருப்ப ஜன்னல் கண்ணாடிகளை கழற்றியதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
63 வயதான சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

