வெரஹெரவில் போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் நிலையம் முற்றுகை : இருவர் கைது!

143 0
பொரலஸ்கமுவ, வெரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு முன்பாக  போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரிக்கும் நிலையமொன்று சோதனையிடப்பட்டு, அதன் உரிமையாளரும் மற்றொருவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டதாக நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டு தேசிய அடையாள அட்டைகள், ஒரு கடவுச்சீட்டு, 9 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள், 4 சாரதி அனுமதிப்பத்திரங்கள், போலியான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தயாரிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய கணினி மற்றும் 5,250 மில்லி கிராம் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.