சபாநாயகரின் உத்தரவை செவிமெடுக்காமை தவறு – அமைச்சர் சரத் அமுனுகம

359 0

சபாநாயகரின் உத்தரவை செவிமெடுக்காமல் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் உத்தரவை மதித்து செயற்பட வேண்டும்.

தற்போது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினரும் எதிர் தரப்பினரும் சபாநாயகருக்கு எதிராக வெளிநடப்பு செய்துள்ளனர்.

அது தவறு. சபாநாயகருக்கு எதிர்ப்பு வெளியிட வேண்டும் என்றால் அதற்கு மாற்று முறைகள் இருக்கின்றன எனவும் அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.