மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகத்தில் காணப்படும் சிறுவர்சபைக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேச சிறுவர்சபையூடாக சிறுவர்களின் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தினை மேம்படுத்தல் மற்றும் பங்கேற்பு உரிமையினை வழங்கும் நோக்கில் மாவட்ட செயலகத்தினால் யுனிசெப் நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட வோண்டுகோளிற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற விளையாட்டு உபகரணங்கள் வியாழக்கிழமை (14) பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.





