10,000 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை 9,000 ரூபாய்க்கு இன்று (15) முதல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சில அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைக்கவில்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.

