ஐ.எஸ். அமைப்பு ஆதரவு கொள்கை- கோவையில் 200 பேர் தொடர்ந்து கண்காணிப்பு

69 0

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் வெப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். அவனது வீட்டில் இருந்து வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த முபின் கோவையில் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவினர் (ஐ.எஸ்), மத ரீதியிலான தகவல்களை விசாரிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவினர் (எஸ்.ஐ.சி.) ஆகியோர் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.