தகராறில் ஈடுபட்டவர்களை பயமுறுத்துவதற்காக ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீடிஅபயரட்ண கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹொரண பொரலுகொடவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நிலத்தை பராமரிப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட தம்பதியினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வேறு எவரையும் அங்கு அழைத்துவரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
எனினும் 14ம்திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பகுதிக்கு சென்றவேளை அவரது காணியில் வேறு பலர் காணப்பட்டுள்ளனர் இதன் பின்னர் அவருக்கும் அந்த குழுவினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு;ள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களை எச்சரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதன்பின்னர் விசாரணை செய்த பொலிஸார் 70 வயது நாடாளுமன்ற உறுப்பினரை கைதுசெய்ததுடன் துப்பாக்கியொன்றை மீட்டுள்ளனர்.

