பாடசாலையின் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் கழுத்தறுக்கப்பட்டு கொலை!

176 0

ஊருபொக்க தம்பஹல பிரதேச  பாடசாலை ஒன்றில்  கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் வீட்டுக்குச்  சென்றுகொண்டிருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்டும் மார்பில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிதாரி மதுமாலி என்ற 29 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

பாடசாலையிலிருந்து பஸ்ஸில் வந்து  தனது ஊரிலிருந்து  வீட்டுக்கு நடந்து செல்லும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கிருந்தவர்கள்  அவரை மீட்டு  ஊருபொக்க வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் யுவதியின் காதலன் என  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.