ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவரை அவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பயனளிக்காத நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் திங்கட்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பொடிமாத்தையா சந்திரசேன அனச்ராஜ் (வயது 21) என்பவராவார்.
இவரின் மரணம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார் பிரேத பரிசோதனைக்கு பின் இவரின் உடலை உறவினரிடம் ஒப்படைக்க பொலிஸாருக்கு கட்டளைப் பிறப்பித்தார்.

