பெண்கள் பயன்படுத்தும் முகப்பூச்சுகள் தொடர்பில் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்!

160 0

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர்  வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர, இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்தார்.

மேலும், சில பெண்கள்   சரியான  விளக்கமின்றி  சருமத்தை வெண்மையாக்கும்  முகப் பூச்சுகளை  (கிரீம்)  பயன்படுத்துவது கூட  புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதாரப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.