இந்தச் சம்பவத்தின்போது உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவியால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கைதுசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
கைதிகளின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட வெலிசர நீதிவான், இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரியிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.