ஒருவரை கத்தியால் குத்திவிட்டு அவரின் வாகனத்தை எடுத்துச்சென்று பொதுமக்கள் மீது மோதிய நபர் – நொட்டிங்காமில் பயங்கரம்

179 0
இங்கிலாந்தின் நொட்டிங்காமை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தொடர்கொலைகளில்  பலியானவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

19 மாணவர்கள் இருவரும் 50 வயது நபர்ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50வயது நபரை கத்தியால் குத்திய பின்னர் அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற சந்தேகநபர் மூவரை கத்தியால் குத்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பார்னமி வெபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்- பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த சம்பவத்தை திறந்த மனதுடன் அணுகுவதாக தெரிவித்துள்ளனர்.

31 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பயங்கரமானது துயரமானது என தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணையுடன் தொடர்புடைய எவரையாவது தேடுவதாக தெரிவித்துள்ளனர்.

இல்கெஸ்டன் வீதியில் இருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மில்டன் வீதியிலிருந்து தகவல் வந்தது அங்கு வாகனமொன்றை திருடிய நபர் அந்த வாகனத்தால் மூவரை இடித்துக்கொல்ல முயன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வான் மேப்பில்ஸ் வீதியில் நிறுத்தப்பட்டது அதிலிருந்தவர் கைதுசெய்யப்பட்டார்.

மக்டலா வீதியில் 50 வயது நபர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் அந்த தருணத்தில் சந்தேகநபர் வாகனத்தை திருடி மில்டன்வீதிக்கு கொண்டு சென்று பலர் மீது மோதியுள்ளார் என நாங்கள் கருதினோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்திற்கான காரணம் என்பது குறித்து உறுதியான முடிவுகளிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மனநலப்பபாதிப்புள்ளவர் என்பது தெரியவருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.