இலங்கையரை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தலையீடு

294 0

மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிப்பதற்காக இராஜதந்திர முறையில் தலையீடு செய்வதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

வௌிவிவகார அமைச்சின் சட்டப் பிரிவு பணிப்பாளர் ஏ.எச்.எம். விஜேரத்ன, குறித்த இலங்கையரின் குடும்பத்தினரை சந்தித்தபோது இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தனது கணவருக்கு மாலைத்தீவு அரசாங்கம் நியாயம் வழங்க வேண்டும் என்று குறித்த நபரின் மனைவி கூறியுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டில் குறித்த இலங்கையர், மாலைத்தீவு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.