அண்மையில் சோதனை செய்து பார்த்த கூகுல் பலூன் சம்பந்தமாக அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு சரியான தௌிவில்லை என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
தற்போது இலவச வைபை வசதியை நாட்டிலுள்ள பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
குறித்த திட்டத்திற்காக அரசாங்கம் எவ்வித செலவினங்களையும் மேற்கொண்டதில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

