சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களுக்க பதில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிட்டபோது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பந்துல குணவர்தன வாய் திறந்தாலே பொய் கூறுகிறார் என்று நாம் நாடாளுமன்றத்தில் கூறினால், அது பொய் என்பார்கள்.
ஆனால், ஆணைக்குழு ஊடாக அது தற்போது நிரூபனமாகியுள்ளது.
அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு வேண்டும் என்று அவர்கள்தான் கேட்டனர்.
இந்த நிலையில், மக்களை ஏமாற்றும நோக்கில் பொய்யான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஆணைக்குழு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையிட்டு, ஆணைக்குழுவுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

