இலங்கைக்கான கட்டார் தூதுவராக வர்த்தகர் ஒருவர் நியமனம்

339 0

இலங்கைக்கான கட்டார் தூதுவராக வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

தமது நியமனக் கடிதத்தை வர்த்தகர் லியனகே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நேற்று உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வர்த்தகரான ஏ.எஸ்.பி. லியனகே, இலங்கை தொழில் கட்சித் தலைவராவார்.

அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில், இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.